"களை கட்டியது, ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வெளியாகிறது, இறுதி வேட்பாளர் பட்டியல்"

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல், இன்று மாலை வெளியிடப்படுகிறது. இறுதி வேட்பாளர்கள் முடிவானதும், அனைவருக்கும் உடனடியாக சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும்.
x
இந்த தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் களின் பட்டியல், வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மேல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து, வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். 9 மாவட்டங்கள் நீங்கலாக 27 மாவட்டங்களில் முதல்
கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 ம் தேதியும், 2 -வது கட்ட தேர்தல் 30 ம் தேதியும் நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையில் இல்லாமலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடைபெறும்.

மொத்தமுள்ள 4 பதவி இடங்களுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் களத்தில் நிற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும், தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும். அரசியல் கட்சி தலைவர்களின் பிரசார அட்டவணை, இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, தலைவர்களும் களத்தில் குதிக்கும் போது, தேர்தல் பிரசாரம் நிச்சயம் அனல்பறக்கும்.

Next Story

மேலும் செய்திகள்