"வடகிழக்கு மாநிலங்கள் மீது கிரிமினல் தாக்குதல்" - மத்திய அரசு மீது, ராகுல்காந்தி கடும் தாக்கு

குடியுரிமை சட்ட மசோதா, வட கிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்கள் மீது கிரிமினல் தாக்குதல் - மத்திய அரசு மீது, ராகுல்காந்தி கடும் தாக்கு
x
குடியுரிமை சட்ட மசோதா, வட கிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டம் தொடர்பாக செய்தி இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை இணைத்து, தமது ட்விட்டர் வலைப்பதிவில், ராகுல்காந்தி பதிவிட்டு உள்ளார். மோடி - அமித்ஷா அரசு, வட கிழக்கு மாநிலங்களை இன ரீதியாக துடைத்தெறியும் முயற்சி இது என அவர் கூறியுள்ளார். வட கிழக்கு மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தோள்கொடுத்து, ஆதரவாக இருக்கும் என்றும் ராகுல்காந்தி, தமது ட்விட்டர் பதிவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்