"மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் கறுப்பு தினம்" - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து

நாடாளுமன்றத்தில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள், கறுப்பு தினம் என, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் கறுப்பு தினம் - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கருத்து
x
நாடாளுமன்றத்தில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள், கறுப்பு தினம் என, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். இது ,தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள, சமத்துவம், பாகுபாடு இன்மை போன்றவற்றிக்கு எதிராக, திருத்தப்பட்ட குடியுரிமைச்சட்டம் இருப்பதாக கூறியுள்ளார்.  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நாடே கொண்டாடும் நிலையில், மத்திய அரசு மக்களை பிரித்தாளும் இது போன்ற சட்டங்களை இயற்றுவதாக கூறியுள்ளார். பாஜகவின் இது போன்ற கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும், அந்த அறிக்கையில் சோனியாகாந்தி கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்