"பாதுகாப்பு தொடர்பாக யாருக்கும் சந்தேகம் தேவையில்லை" - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

நமது படைகள் விழிப்புடன் நமது எல்லைகளை பாதுகாத்து வருவதாகவும், எந்த வகையான சவால்களையும் எதிர்​கொள்ள முப்படைகள் தயார் என்றும், அதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பாக யாருக்கும் சந்தேகம் தேவையில்லை - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
x
நமது படைகள் விழிப்புடன் நமது எல்லைகளை பாதுகாத்து வருவதாகவும், எந்த வகையான சவால்களையும் எதிர்​கொள்ள முப்படைகள் தயார் என்றும், அதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில், காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து ​பேசிய ராஜ்நாத் சிங், இருதரப்பும் ஒப்புக் கொண்ட எல்லைக் கோடு இந்தியா, சீனா இடையே இல்லை என்று தெரிவித்தார். சில நேரங்களில் தவறுதலாக சீன ராணுவமும், சில நேரங்களில் நமது ராணுவமும்  எல்லை தாண்டி செல்லும் நிகழ்வு நடந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சீன எல்லைப் பகுதியில் சாலைகள், ரயில்வே பாதைகள், விமான தளங்கள் மற்றும் குகைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும்,  நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்​மையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்