நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே வரி : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கேள்விக்கு நிதியமைச்சர் பதில்

சரக்கு மற்றும் சேவை வரியை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி பேசிய போது, நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு கொண்டு வரப்படும் என தெரிவித்ததாக மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய தயாநிதி மாறன் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே வரி : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கேள்விக்கு நிதியமைச்சர் பதில்
x
சரக்கு மற்றும் சேவை வரியை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி பேசிய போது, நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு கொண்டு வரப்படும் என தெரிவித்ததாக மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் சுட்டிக்காட்டினார். மேலும், எப்போது நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே வரி விதிக்கப்படும் எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அது குறித்து சரக்கு மற்றும் சேவை வரி குழு தான் இறுதி செய்ய வேண்டும் என விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்