மகா ஆட்சி - அதிரடி திருப்பங்கள்..
பதிவு : நவம்பர் 27, 2019, 02:29 AM
மகாராஷ்டிராவில் நீண்ட நாள்களாக நீடித்து வந்த அரசியல் நாடகங்களுக்கு பிறகு, சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.
கடந்த மாதம்  21 ஆம் தேதி  மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

பா.ஜ.க -105 தொகுதியிலும்,சிவசேனா - 56  தொகுதியிலும் வெற்றி பெற்றன. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும்,  காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில்,  முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்வதில் பாஜக - சிவசேனா கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை. 

இதை தொடர்ந்து நவம்பர் 12-ம் தேதி மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, சிவசேனா தலைமையில் கூட்டணி அமையும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். இந்த நிலையில், அந்த கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான அஜித்பவார், ஆளுநரை சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

இதை தொடர்ந்து, அஜித் பவார் ஆதரவுடன், 23-ம் தேதி, மகாராஷ்டிரா முதலமைச்சராக பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திரபட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக அஜித் பவாரும் பதவியேற்றார். இதை எதிர்த்து, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு, புதன்கிழமை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டது. 

புதிய அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ், துணை முதலமைச்சர் அஜித் பவார், ஆகியோர் தங்களது பதவியை செவ்வாய்க்கிழமையன்று ராஜினாமா செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1077 views

"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

137 views

மாநகராட்சி லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் - சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

127 views

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி ஆணை - எஸ்.பி.வேலுமணி

கருணை அடிப்படையில் 33 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

9 views

பிற செய்திகள்

கேரள காவல்துறைக்கு வாடகை ஹெலிகாப்டர்

கேரள காவல் துறை மாத வாடகை ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்க தீர்மானித்துள்ளது.

10 views

'பட்டாஸ்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

19 views

காவலர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய ரவுடி

சென்னை மணலியில் இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி ஒருவர், ​காவலரையும் அவரின் உறவினரையும் தாக்கியுள்ளார்.

17 views

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்கள் பத்திரமாக மீட்பு

கும்பகோணம் அருகே கொத்தங்குடி கொள்ளிடம் ஆற்று வெள்ளப் பெருக்கில் அடித்து செல்லப்பட்ட இருவர் மீட்கப்பட்டனர்.

8 views

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் : பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்பு

கடலூரில் கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

31 views

திருச்சி : திருமண ஆடை அலங்கார பேஷன்ஷோ

திருச்சியில் நடைபெற்ற திருமண ஆடை அலங்கார பேஷன்ஷோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.