"பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை" - தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்

அஜித் பவார் கூறுவது முற்றிலும் பொய் என்றும், பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை - தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்
x
அஜித் பவார் கூறுவது முற்றிலும் பொய் என்றும், பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த அஜித் பவார், பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஐந்தாண்டுகளுக்கு நிலையான ஆட்சியை தரும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக கருத்து தெரிவித்துள்ள சரத்பவார், அஜித் பவாரின் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்றும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சி அமைக்க, சிவசேனா, காங்கிரஸ் உடன் கூட்டணி சேருவது என தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்றும், பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் டிவிட்டரில் சரத்பவார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்