உச்சநீதிமன்றத்தில் காங்., சிவசேனா, தேசியவாத காங்., வழக்கு - இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளித்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டாக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் காங்., சிவசேனா, தேசியவாத காங்., வழக்கு - இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
x
மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக பாஜக- தேசியவாத காங்கிரஸின் அஜித்பவார்  இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளன.பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளதுடன் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவி ஏற்றுள்ளார்.  ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார் மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக தெரிவித்தார்.  இதையடுத்து பாஜக தொண்டர்கள் நாக்பூரில் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  இனிப்பு விநியோகித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, பாஜக முறைகேடான வகையில் ஆட்சி அமைத்தது மகாராஷ்டிரா மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் என குறிப்பிட்டார்
சிவசேனாவை உடைக்க பாஜக முயற்சித்தால் மகாராஷ்டிரா தூங்காது என்று உத்தவ் தாக்கரே கூறி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவையில் பாஜக விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், தனது எம்எல்ஏக்களை அக்கட்சி ஆளும் வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸின் 9 எம்எல்ஏக்கள், தனி விமானம் மூலம் மும்பையில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது எம்எல்ஏக்களை சிவசேனா கட்சி தங்க வைத்துள்ளது. இதற்கிடையே ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன. இந்தமனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 42 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.  இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் பொறுப்பில் இருந்து அஜித் பவார் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை குழு தலைவராக ஜெயந்த் பட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சரத் பவார் அறிவித்தார்.  
மேலும் மும்பையில் ஒய்.பி. சவான் மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 54 பேரில் 49 பேர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த எம்எல்ஏக்கள் அனைவரையும் மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைப்பதற்காக சொகுசு பேருந்தில் அழைத்துச் சென்றனர். 



Next Story

மேலும் செய்திகள்