"உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த அ.தி.மு.க. அச்சம்" - ஸ்டாலின்

யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காத்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த அ.தி.மு.க. அச்சம் - ஸ்டாலின்
x
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆட்சியில் இருந்தால் போதும் என்ற நினைப்பில் ஆளுங்கட்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மக்கள் நலனுக்கான எந்த திட்டம் பற்றியும் சிந்திக்காமல், அடிப்படை தேவைகளை கூட நிறைவற்றாமல் அதிமுக அரசு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல், மூன்றாண்டுகளை கடத்தியது அதிமுக அரசுதான் என்று குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின், பழியை தி.மு.க. மீது போடுவதாகவும் தெரிவித்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தலை  நியாயமாக நடத்த வேண்டும் என்பதுதான் தி.மு.க.,வின் கோரிக்கை என்றும் அதை செய்யாமல் பயந்து அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட்டு கொண்டே போனதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.  

தோல்வி பயத்தால் தேர்தலை நேர்மையாக நடத்திட அதிமுக அரசு அச்சப்படுவதாகவும், யாராவது நீதிமன்றம் சென்று தேர்தலை நிறுத்த மாட்டார்களா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்