ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: "விசாரணைக்காக பேராசிரியர்கள் ஏன் அழைக்கப்படவில்லை?" - கனிமொழி

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய உயர்கல்வித்துறை செயலாளரை அனுப்பி உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணைக்காக பேராசிரியர்கள் ஏன் அழைக்கப்படவில்லை? - கனிமொழி
x
மக்களவையில் இன்று பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணைக்காக இதுவரை ஒரு பேராசிரியர் கூட அழைக்கப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், உயர்கல்வித்துறை செயலாளரை விசாரணைக்காக அனுப்பி உள்ளதாக கூறினார். மேலும் சென்னை மாநகர ஐஜியும் ஏற்கனவே விசாரணையை தொடங்கி உள்ளதாக தெரிவித்த அவர், அவர்கள் தரும் அறிக்கைக்கு உட்பட்டு நிச்சயம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்