முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தமது காபந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
x
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தமது காபந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பெரும்பான்மை வெற்றிபெற்ற பாஜக-சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஆட்சியில் சரிபாதி பங்கு மற்றும் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என கூட்டணி கட்சியான சிவசேனா முரண்டு பிடித்து வருவதால், கூட்டணி இல்லாமல் பாஜகாவால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி கூட்டணியாக போட்டியிட்ட நீண்ட நாள் நண்பனான சிவசேனா முரண்டு பிடிக்கிறது. இந்த அரசியல் பரபரப்புக்கு நடுவே, மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கொஸ்யாரியை சந்தித்த தேவேந்திர பட்நாவிஸ் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கொடுத்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்