அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 70-ஆம் ஆண்டு நிறைவு விழா: குடியரசு தலைவர், பிரதமர் உரையாற்றுகின்றனர்

அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 70 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனையொட்டி வரும் 26 ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 70-ஆம் ஆண்டு நிறைவு விழா: குடியரசு தலைவர், பிரதமர் உரையாற்றுகின்றனர்
x
நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. வரும் 26 ஆம் தேதியுடன் அரசியல் அமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  நாடாளுமன்ற மைய மண்டபத்தில் முற்பகல் தொடங்கும் கூட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பேசுகின்றனர். இந்த நிகழ்வில், இரு அவைகளின் ​உறுப்பினர்கள் மட்டுமின்றி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தை தொடங்குவதற்காக நடைபெற்ற நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை போல இந்த கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்