மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை - சரத்பவார்

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை தடுக்க, பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை - சரத்பவார்
x
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மக்கள் தங்களுக்கு அந்த  வாய்ப்பை தான் அளித்துள்ளதாகவும், மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை என்றும் சரத்பவார் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவதை தடுக்க, பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி விரைவில் அமைய வேண்டும் என்றும், அதற்கு தான் மக்கள் வாக்களித்து உள்ளதாகவும் சரத்பவார் தெரிவித்துள்ளார். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சொல்வத போல, அக்கட்சி அமைக்கும் கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்கிருந்து வரும் என்றும் கேள்வி எழுப்பிய சரத்பவார், தமக்கு மீண்டும் மாநில முதலமைச்சராக விருப்பம் இல்லை என தெரிவித்தார். மேலும் வெளியில் இருந்து எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் திட்டம் இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து சோனியா காந்தியிடம் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்