"தொகுதிகளை சொர்க்க பூமியாக மாற்றுவோம்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
x
நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில், நாங்குநேரி தொகுதி வாக்களர்களுக்கு நன்றி சொல்லும் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சீனிவாசன், செல்லூர் ராஜூ,விஜயபாஸ்கர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வளர்மதி, சரோஜா, வெல்லமண்டி நடராஜன், ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, பாஸ்கரன் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி உள்ளிட்ட சட்டமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். விழாவில்  பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்,  மாபெரும் வெற்றியை  தந்த  நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளை சொர்க்கபூமியாக மாற்றும் திட்டங்களை கொண்டுவருவோம் என்று வாக்குறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்