திமுக போட்ட பொய் வழக்கே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திமுக போட்ட பொய் வழக்கே ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
x
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். முன்னீர் பள்ளம் பகுதியில் வேன் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட திமுகவினர்தான் காரணம் என்று அவர் குற்றஞ் சாட்டினார். ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம் என கூறிய எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆவி, இவர்களை மன்னிக்காது என ஆவேசம் காட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்