அமித்ஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு : நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா டக்கல் தகவல்

அரியானா மாநிலத்தில் வரும் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
அமித்ஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு : நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா டக்கல் தகவல்
x
அரியானா மாநிலத்தில் வரும் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அரியானவில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமித்ஷா பங்கேற்கவில்லை என சிர்சா தொகுதி பாஜக எம்.பி சுனிதா டக்கல் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா இல்லாத நிலையில் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் உரையாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு என்ன உடல் நலக்குறைவு என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்