"அம்பானி - அதானியின் ஒலிபெருக்கி, மோடி" - ராகுல்காந்தி விமர்சனம்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் அம்பானி மற்றும் அதானியின் ஒலிபெருக்கியாக பிரதமர் நரேந்திரமோடி செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
அம்பானி - அதானியின் ஒலிபெருக்கி, மோடி - ராகுல்காந்தி விமர்சனம்
x
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் அம்பானி மற்றும் அதானியின் ஒலிபெருக்கியாக பிரதமர் நரேந்திரமோடி செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானா மாநிலம் நுஹ் என்ற நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பொருளாதார மந்தநிலையால், நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றார்.  அடுத்த 6 மாதங்களில் நிலைமை மோசமடையப் போகிறது என எச்சரித்த ராகுல்காந்தி, அப்போது, நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் என்று குறிப்பிட்டார்.  பிரதமர் நரேந்திரமோடி நாட்டில்,  வெறும் 15 பேருக்காக மட்டுமே வேலை செய்கிறார் என்றும் அவர் குற்றஞ் சாட்டினார்.  காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்றும்,  ஆனால் பாஜகவும்  ஆர்எஸ்எஸ் அமைப்பும், நாட்டில் பிளவுகளை உருவாக்குவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்