புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் : வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம்

புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெறும் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு 11 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் : வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம்
x
புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெறும் காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு 11 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக சோனியா காந்தியை நாளை 25 -ம் தேதி சந்திக்க உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக கல்வியாளர் நாகராஜன் உட்பட 6 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதுபால, அதிமுக சார்பாகவும் விருப்பமனு பெறப்படுகிறது. இந்த கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு எதுவும் பெறப்படவில்லை. எனவே, அதிமுக, பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடப்போகிறது என்ற குழப்பம் நீடிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்