"500 மருத்துவர்கள், 3000 செவிலியர்கள் பணி நியமனம்" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் விரைவில் 500 மருத்துவர்களும், 3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 7 கோடி ரூபாய் செலவில்  மேம்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் இருதய உள்ளூடுருவி ஆய்வக மைய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. 
இதில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை  திறந்து வைத்தனர். அப்போது பேசிய   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 
சென்னைக்கு பிறகு விழுப்புரத்தில்தான் மேம்படுத்தப்பட்ட அதிநவீன மேம்படுத்தப்பட்ட  24 மணி நேர அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். சுகாதாரத்துறையில் 2, மூன்று 
வாரங்களில்  500 மருத்துவர்களும்,  3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்