சட்டக் கல்லூரி மாணவிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை - முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது

சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர்.
சட்டக் கல்லூரி மாணவிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை - முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது
x
சட்டக் கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்து,  மாணவிக்கு ஓராண்டாக  பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், முன்னாள் பா.ஜ.க. மத்திய அமைச்சர் சின்மயானந்தா இன்று கைது செய்யப்பட்டார். சின்மயானந்தா பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். 73 வயதான சின்மயானந்தா, கடந்த ஆண்டு தாம் நடத்தும் சட்டக் கல்லூரி ஒன்றில் மாணவி ஒருவருக்கு சட்டப் படிப்பு படிக்க இடம் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அந்த மாணவி குளிக்கும் போது படம் எடுத்து வைத்து மிரட்டி, ஓராண்டாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுதொடர்பாக மாணவி அளித்த புகார் மீது உத்தரப்பிரதேச காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், மாணவி மாயமானார். இதனைத் தொடர்ந்து  மாணவி  சமூக வலைதளத்தில் பதிவிட்ட தகவலில், சின்மயானந்தா பெயரை வெளியிட்டார். ஒரு வாரத்துக்கு பின்னர் 23 வயதான மாணவியை உத்தரப்பிரதேச போலீசார் கண்டுபிடித்த நிலையில், அவரது தரப்பு வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம், சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஒரு வார கால விசாரணைக்கு பின்னர், நேற்று மாணவியின் வாக்குமூலம் ஷாஜெகன்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று சுவாமி சின்மாயானந்தாவை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
==

Next Story

மேலும் செய்திகள்