புதிய நிறுவனங்கள் தொடங்கினால் வரிச் சலுகை - நிர்மலா சீதாராமன்
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கோவா மாநிலம் பானாஜியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர், உற்பத்தி துறையில் புதிய நிறுவனங்களுக்கு 25 சதவீதம் விதிக்கப்பட்டு வந்த வரி விகிதம் 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக கூறினார்.
நிறுவனங்களின் குறைந்தபட்ச மாற்று வரி 18 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுவதாவும், வரிக் குறைப்பு சலுகைகள் 2023 ஆண்டுவரை தொடரும் என்றும் கூறினார். நிறுவனங்களின் வரிச் சுமை குறைந்துள்ளதால் புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பு உருவாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பொருளாதார தேக்க நிலை நிலவும் சூழலில், தொழில்துறை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story