அ.ம.மு.க. புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் தி.மு.க.வில் இணைந்தார்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் தம்பியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்.
x
அ.தி.மு.க. எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் தம்பியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு  சால்வை அணிவித்த பரணி கார்த்திகேயன் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டையில் விரைவில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்