ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: "ஜாமீன் தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தை அணுக உத்தரவு" - உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்வதில் இருந்து முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ஜாமீன் தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தை அணுக உத்தரவு - உச்சநீதிமன்றம்
x
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்வதில் இருந்து முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி அமர்வு, ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது. மேலும் ப.சிதம்பரம் சி.பி.ஐ. நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மறுக்கும் நிலையில் அவரை திகார் ​சிறையில் அடைக்கக் கூடாது என்றும், வியாழக்கிழமை வரை சி.பி.ஐ. காவலில் வைக்கவும் நீதிபதி பானுமதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக 3 நாள் போலீஸ் காவலுக்கு பின்னர், இன்று மதியம் ரோஸ்வேல்யூ நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை ஆஜர்படுத்த உள்ளனர்.  ப.சிதம்பரம் தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் நிலையில், அது விசாரணைக்கு ஏற்கப்படுமா? அல்லது சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பப்படுவாரா என்பது தெரியவரும். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவால், அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்