எம்பி ஆனார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், இம்முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மன்மோகன்சிங்கின் தேர்வு ராஜஸ்தான் மாநிலத்திற்கே பெருமை என்று குறிப்பிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு, காங்கிரஸ் கட்சியும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளது.
Next Story