"கருணாநிதி இல்லாத இடத்தை ஸ்டாலின் நிரப்பியுள்ளார்" - திருமாவளவன்
கருணாநிதி இல்லாத இடத்தை ஸ்டாலின் நிரப்பி உள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது பிறந்தநாளான நேற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்ற பின்னர், செய்தியார்களிடம் பேசிய திருமாவளவன், ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளன்று கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம், தற்போது அவர் இல்லாத காரணத்தால் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். கருணாநிதி இல்லாத இடத்தை ஸ்டாலின் நிரப்பி உள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.
Next Story