"உடல் உறுப்பு தானம் செய்வோம்... உயிர்களை காப்போம்..." முதலமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்

உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் செய்வோம்... உயிர்களை காப்போம்... முதலமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள்
x
உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். நாளை உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அளவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். தற்போது உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே தமிழக அரசு மாற்றி வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், உடல் உறுப்பு தானம் செய்வோம் - உயிர்களை காப்போம் என அனைவரும் உறுதி மொழி ஏற்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்