ஜம்மு, காஷ்மீரை முழுவதுமாக மீட்க உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டோம் - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீரை முழுவதுமாக மீட்க , உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டோம் என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளார்
ஜம்மு, காஷ்மீரை முழுவதுமாக மீட்க உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டோம் - அமித்ஷா
x
ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவை திரும்ப பெறும் தீர்மானத்தை, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசினா​ர். ஜம்மு, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், ஜம்மு, காஷ்மீர் தொடர்பாக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார். ஜம்மு, காஷ்மீர் என்றால் அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் ஆகியவையும் அடங்கும் என்றும் தெரிவித்த அமித்ஷா, அதற்காக உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டோம் என்றார். காஷ்மீர் பிரச்சினைக்கு ஐ.நா தலையிட்டு தீர்வு காண காங்கிரஸ் கட்சி விரும்புகிறதா? எனவும் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்