வேலூர் தேர்தலில் வெற்றி யாருக்கு...? : தந்தி டி.வி.யின் கருத்துக்கணிப்பு முடிவுகள்

வேலூர் தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது பற்றிய தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
x
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வேலூர் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், மக்களின் முடிவை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கிறது. 

இந்த நிலையில், வேலூர் மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை அறிய, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை தந்தி டி.வி. நடத்தியது. இதன் முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. 

யாருக்கு வாக்களித்தீர்கள்...? என வேலூர் தொகுதி மக்களிடம் கேட்ட போது, நாம் தமிழர் கட்சிக்கு என 4 முதல் 7 சதவீத மக்களும், அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தோம் என  41 முதல்  47 சதவீத மக்களும், திமுக கூட்டணிக்கே எங்கள் வாக்கு என 46 முதல் 52 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்