"நாடே திருப்தியடைந்த ஒரு தருணம்" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது நாடே திருப்தியடைந்த ஒரு தருணம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடே திருப்தியடைந்த ஒரு தருணம் - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து
x
முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது நாடே திருப்தியடைந்த ஒரு தருணம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், பாலின சமத்துவத்திற்கான பயணத்தில் முத்தலாக் தடை மசோதா மைல் கல்லாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். 

"இஸ்லாமிய பெண்களின் கண்ணியம், வளர்ச்சிக்கு மசோதா உதவும்" - சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி கருத்துமுத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில், கருத்து பதிவிட்டுள்ள அவர், ஏற்றுக் கொள்ள முடியாத ஆதி கால செயல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இஸ்லாமிய பெண்களுக்கு நிகழ்ந்த அநீதி முத்தலாக் தடை சட்டம் மூலம் சரி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்த மசோதா உதவும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"இந்திய ஜனநாயகத்தின் மகத்துவமான நாள்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்துஇந்திய ஜனநாயகத்திற்கு மகத்துவமான நாள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், பிரதமர் மோடி தமது லட்சியத்தை நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவிற்கு ஆதரவளித்த அரசியல் கட்சியினருக்கு அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்