முத்தலாக் மசோதா குடும்ப அமைப்பை சிதைக்கும் : காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதா, குடும்ப அமைப்பை சிதைக்கும் என, மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் புகார் கூறியுள்ளார்.
முத்தலாக் மசோதா குடும்ப அமைப்பை சிதைக்கும் : காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு
x
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதா, குடும்ப அமைப்பை சிதைக்கும் என, மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் புகார் கூறியுள்ளார். முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், இந்த மசோதா திருமண உரிமைகளை பாதுகாக்காது என தெரிவித்தார். சிறுபான்மையின குடும்பத்தில் கணவன் மனைவி சண்டையிட்டு, தனித்தனியாக வழக்கறிஞர்களை நாடி செல்வார் என்றும், சொத்தை விற்று வழக்கு தொடுத்து, கணவன் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படும் என்றும், அவர் குறிப்பிட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும், வருமானம் ஏதுமின்றி தவறான பாதையில் இளைஞர்கள் செல்ல இந்த மசோதா வழி வகுக்கும் என்றும் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்