பா.ஜ.க. உடன் கைகோர்ப்பு என வெளியான செய்தி : குமாரசாமி திட்டவட்ட மறுப்பு

பா.ஜ.க. உடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கைகோர்ப்பதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. உடன் கைகோர்ப்பு என வெளியான செய்தி : குமாரசாமி திட்டவட்ட மறுப்பு
x
பா.ஜ.க. உடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கைகோர்ப்பதாக வெளியான செய்தி அடிப்படை ஆதாரமற்றது என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதுபோன்ற தகவலுக்கு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், தொண்டர்களும் செவிகொடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். உண்மைக்கும் இந்த வதந்திக்கு உள்ள இடைவெளி மிக நீண்டது என்றும், மக்கள் சேவைக்காக கட்சியை எதிர்காலத்தில் இன்னும் பலப்படுத்துவோம் என்றும், சாமானிய மக்களுக்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் போராட்டம் தொடரும் என்றும் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்