"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு"- வைகோ

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து வைகோ தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
x
விடுதலைப்புலிகள் மீதான 5 ஆண்டு  தடையை நீட்டிக்க மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, அது தொடர்பான ஆட்சபேனைகளை தெரிவிக்க அமைக்கப்பட்டிருந்த தீர்ப்பாயத்தில், நீதிபதி 
சங்கீதா திங்க்ரா சாகால் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட்ட வைகோ, தீர்ப்பாயத்தில் தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வைகோவின் மனு தொடர்பாக மத்திய அரசு தரப்பு பதில் அளிக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்