"பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"முதலமைச்சரின் பிரசார யுக்தி வெற்றி பெறும்"
x
வேலூர் மாவட்டம், கே .வி.குப்பம் நாகல் கிராமத்தில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  5 பவுன் வரை அடமானம் வைத்துள்ள நகைகளை மீட்கலாம் போன்ற எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளதாக தெரிவித்தார். வேலூர் மக்கள் நிதர்சனத்தை உணர்ந்தவர்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர் பாண்டியராஜன், முதலமைச்சரின் பிரசார யுக்தி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்