மக்களவை தேர்தல்:"தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்" - அமைச்சர் கே.சி.வீரமணி

அதிமுக தேர்தல் பணிக்குழுக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
x
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வது குறித்து அதிமுக தேர்தல் பணிக்குழுக்கள் ஆலோசனைக்கூட்டம் வேலூரில் நடைபெற்றது. மொத்தம் 30 அமைச்சர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தேர்தலில் வெற்றி பெற்றால் தான் கட்சிக்கு எதிர்காலம் என்றார். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்