நாடாளுமன்ற கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு நீட்டிப்பு?
நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் இன்று காலை பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்ற ஏதுவாக நடப்பு கூட்டத்தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க உள்ள கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story