வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - கதிர் ஆனந்த், தி.மு.க. வேட்பாளர்

வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தெரிவித்தார்
x
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க.  பொருளாளர் துரைமுருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த துரைமுருகன், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு விரும்பினால், மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை பெற வேண்டியது வரும் என்றார். வேலூரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். இதையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்