நீட் விவகாரம் : மக்களவையில் ஆ.ராசா கேள்வி - மத்திய அமைச்சர் பதில்

நீட் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்தார்.
x
நீட் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவையில் திமுக உறுப்பினர் ராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசிடம் இருந்து கோரிக்கை வந்ததாக தெரிவித்தார். ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 விதி 10டி பிரிவின்படி மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுக்க ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படுவது கட்டாயம் என்பதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்