"முக்கிய பிரச்சினைகளை பேச தவறிய பட்ஜெட்" - இந்திய கம்யூ. உறுப்பினர் டி.ராஜா பேச்சு

மத்திய பட்ஜெட்டில், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த பேச அரசு தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரச்சினைகளை பேச தவறிய பட்ஜெட் - இந்திய கம்யூ. உறுப்பினர் டி.ராஜா பேச்சு
x
மத்திய பட்ஜெட்டில், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த பேச அரசு தவறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மாநிலங்களவையில் பேசிய அவர், பழங்குடி, சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேசப்படவில்லை என்றார்.  மேலும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதற்கு டி.ராஜா கண்டனம் தெரிவித்தார். கல்வி கடன் செலுத்தாத மாணவர்களின் புகைப்படங்களை வங்கி நிர்வாகம் வெளியிடுவதால், மனஉளைச்சலில், அந்த மாணவர்கள் தற்கொலை செய்யும் அவலநிலை நிலவுவதாக அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்