தண்ணீர் பற்றாக்குறையை கூட்டு முயற்சியின் மூலமே சரி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி

இரண்டாவது முறையாக, பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார்.
தண்ணீர் பற்றாக்குறையை கூட்டு முயற்சியின் மூலமே சரி செய்ய வேண்டும் - பிரதமர் மோடி
x
இரண்டாவது முறையாக, பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது, ஜனநாயகத்தை காப்பாற்ற இந்திய வாக்காளர்கள் தனக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  நாட்டின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதை தான் அறிவதாகவும், இந்த அசாதாரண சூழ்நிலையை நாம் அனைவரும் கூட்டு முயற்சியின் மூலமே சரி செய்ய வேண்டும் எனவும் மோடி தெரிவித்தார். அரசியல் கட்சி தலைவர்கள், பொதுநல அமைப்புகள், சினிமா நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் பொதுமக்களிடம் நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்த கோரிக்கை விடுப்பதாகவும், ஒரு துளி நீரை கூட வீண் அடிக்காமல் இருக்க முயற்சி செய்வோம் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.  நூற்றாண்டு காலமாக நீரை சேமிக்க நாம் கடைபிடித்து வந்த பழைய கால முறையினை மீண்டும் பின்பற்ற வேண்டும் எனவும், நீரை சேகரிக்கும் பல்வேறு நடைமுறைகள் கோவில்கள் உள்ளிட்ட புராதான இடங்களில் இன்றும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்