"விளை நிலங்களில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

விளை நிலங்களில் அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.
விளை நிலங்களில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
x
தமிழகத்தில் போதிய மழை பெய்யதாத நிலையில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்க, தேவையான நடவடிக்கையை எடுத்து வெற்றிகரமாக கையாண்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நாள்தோறும் 80 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறினார். சென்னையில் 9 ஆயிரம் லாரிகள் முலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும்,  நெமிலியில் 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தண்ணீர் பஞ்சத்தை உணர்ந்து, குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தவும் அவர்  வேண்டுகோள் விடுத்தார். விளை நிலங்களில் அரசு அனுமதி பெறாமல் குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்