காங்கிரஸ் தலைவர்கள் படுதோல்வி - 15 மாநிலங்களில் ஒரு எம்.பி. கூட இல்லை

ஓடிசா ஆகிய 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு எம்.பி கூட காங்கிரஸ் கட்சி பெறவில்லை
காங்கிரஸ் தலைவர்கள் படுதோல்வி - 15 மாநிலங்களில் ஒரு எம்.பி. கூட இல்லை
x
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்துள்ளார்.

இதேபோல டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித், மல்லிகா அர்ஜூனா கார்கே, ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்ட பல முன்னோடி காங்கிரஸ் தலைவர்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர். மேலும், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, இமாச்சல பிரதேசம் ,ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மனிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபூரா, உத்தர்க்கண்ட், ஓடிசா ஆகிய 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு எம்.பி கூட காங்கிரஸ் கட்சி பெறவில்லை. இதே போன்று டாமன் அண்ட் டயு, உள்ளிட்ட 3 யூனியன் பிரேதசத்திலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்