ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் ஒப்புகை சீட்டுகளை ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
x
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் போது, முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தால் விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டை ஒப்பீட்டு சரி பார்க்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு இதனை சோதித்து பார்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. நேற்று இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள் மனு அளித்திருந்தன. இது தொடர்பாக இன்று முடிவு அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான முழு அமர்வில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தொடர்பாக உரிய நேரத்தில் பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடைமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்