21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...
x
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் அணுக உள்ளன. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. அப்போது, வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தேர்தல் ஆணையர்களிடம் பல கோரிக்கைககளை எதிர்க்கட்சிகள் சார்பாக முன் வைப்பார்கள் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்