ரிபப்ளிக் தொலைக்காட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரும்பாலன கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெரும் என தெரிவிக்கின்றன.
ரிபப்ளிக் தொலைக்காட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்
x
பிரபல ஆங்கில தொலைக்காட்சியான ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், பா.ஜ.க. கூட்டணி மொத்தம் 305 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 124 இடங்களையும், பிற கட்சிகள் 87 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.   

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள்  : "பாஜக - 306, காங். - 132


இதேபோல் டைம்ஸ் ஸ்னவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், பாஜக கூட்டணி 306 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களையும் பிற கட்சிகள் 104 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.  

இந்தியா டுடே தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு : "அதிகபட்சமாக பாஜக - 365, காங். - 108"

இந்தியா டுடே தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 339 முதல் 365 இடங்களை கைப்பற்றும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 77 முதல் 108 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. 69 முதல் 75 இடங்களை பிற கட்சிகள் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.

என்டிடிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்  : "பாஜக - 303, காங். - 126"

என்டிடிவி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில், பாஜக கூட்டணி மொத்தம் 303 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 126 இடங்களையும்,  பிற கட்சிகள் 112 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சிஎன்என் நியூஸ் 18- கருத்துக்கணிப்பு முடிவுகள் : "மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும்"

சிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பிலும், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்