நாடுமுழுவதும் இதுவரை 3,439.38 கோடி ரூபாய் பணம் பொருள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்

நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து, இன்று வரை மொத்தம் மூவாயிரத்து 439 புள்ளி 38 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் இதுவரை 3,439.38 கோடி ரூபாய் பணம் பொருள் பறிமுதல் -  தேர்தல் ஆணையம் தகவல்
x
நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து, இன்று வரை மொத்தம் மூவாயிரத்து 439 புள்ளி 38 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டிலேயே,  தமிழகத்தில் அதிகபட்சமாக 950 புள்ளி 08 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பணம் மட்டும் 227 புள்ளி 93 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழக முதல் இடத்திலும், குஜராத் மாநிலம் 552 புள்ளி 62 கோடி ரூபாயுடன் 2-வது இடத்திலும், டெல்லி 426 கோடி ரூபாய் என்ற அளவில் 3-வது இடத்தில் உள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது

Next Story

மேலும் செய்திகள்