3-வது அணிக்கு எப்படி தாவலாம் என ஸ்டாலின் திட்டம் - அன்புமணி ராமதாஸ்

கமலின் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
x
கமலின் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அறுபதாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் காவிரி, கோதாவரி இணைப்புத் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றார். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்திருப்பது கண்டிக்கத் தக்கது என்று தெரிவித்த அன்புமணி, தம்மையும், தனது தந்தை ராமதாஸ், முதலமைச்சர் பழனிசாமி ஆகிய மூவரையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம்தாழ்ந்து விமர்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்