மக்களவை தேர்தல் - இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு...

மக்களவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு 51 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் - இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு...
x
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டங்களாக 373 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் 15 தொகுதி, ராஜஸ்தானில் 12,  மத்திய பிரதேசத்தில் 7 , மேற்கு வங்கத்தில் 7 தொகுதி, பீகாரில் 5,  ஜார்க்கண்டில் 4 , ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்