"ஒருதலைப்பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது" - தமிழச்சி தங்கபாண்டியன்

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல் படுவதாக தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார்.
ஒருதலைப்பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - தமிழச்சி தங்கபாண்டியன்
x
தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும்  தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார். அவருக்கு முன்னாள் மேயர்  மா.சுப்பிரமணியமும் ஆதரவு திரட்டிய நிலையில், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல் படுவதாக குற்றம்சாட்டினார்.  

கடந்த தேர்தலில் 576 கோடி பணம் 3 கண்டெய்னர் லாரிகளில் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், அது எப்படி வந்தது என்று இதுவரை எவ்வித விளக்கமும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. உதவியுடன்  எதிர்க்கட்சியினரை முடக்கும்  பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதே போன்று சைதாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, மதவாத நச்சு பாம்பை அடிக்க மதச்சார்பற்ற முற்போக்கு தடியை அனைவரும் ஏந்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்