ஓபிஎஸ் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து

ஊட்டி நடுவட்டம் என்ற இடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
x
ஊட்டி நடுவட்டம் என்ற இடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. நீலகிரியில் பிரசாரம் செய்வதற்காக, பிரசாரம் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் போது நடுவட்டத்தில், வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக அந்த   வாகனத்தில் பன்னீர்செல்வம் செல்லாததால் விபத்தில் சிக்குவதில் இருந்து தப்பித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்