மே 23 - ந்தேதி காங்.தேர்தல் அறிக்கை காலாவதியாகும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மே மாதம் 23 ஆம் தேதி காலாவதியாகி விடும் என, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்
மே 23 - ந்தேதி காங்.தேர்தல் அறிக்கை காலாவதியாகும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி தாக்கு
x
மக்களவை தேர்தலை ஒட்டி, மகாராஷ்ட்டிர மாநிலம் கோன்டியாவில், பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். அப்போது பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில், விவசாயிகள் யூரியாவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டதாக புகார் தெரிவித்தார்.முறையான நீர் பாசன திட்டம், இல்லாமல் விவசாயிகள், ஒரு சொட்டு தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். உள்ளுர் நக்சல்கள் மீது வழக்கு தொடுக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ள காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியை சுட்டிக்காட்டிய அவர், நக்சலைட்டுகள் மாபெரும் சக்தியாக உருவாகும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மே 23 ந் தேதி காலாவதியாகி விடும் எனவும் மோடி குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்